சூப்பர் சைட் டிஷ்.. மரவள்ளிக் கிழங்கு பட்டாணி தேங்காய் பால் கிரேவி!

Published:

maravali kizanku peas cocunt milk gravy - 2026

மரவள்ளிக்கிழங்கு பட்டாணி தேங்காய்ப்பால் கிரேவி

தேவையானவை:

பொடியாக நறுக்கிய மரவள்ளிக்கிழங்கு – கால் கிலோ
ஊறவைத்த பச்சைப் பட்டாணி – 200 கிராம்
தேங்காய்ப்பால் – ஒரு டம்ளர் (அரை மூடியில் எடுத்தது)
பச்சை மிளகாய் – 4
முந்திரி – 6
வெங்காயம் – 50 கிராம்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:

வாணலியில் நறுக்கிய மரவள்ளிக்கிழங்கு, ஊறவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு வேகவிடவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், முந்திரியை விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு, பட்டாணி சேர்க்கவும். அதில் அரைத்த பச்சை மிளகாய், முந்திரி விழுதை சேர்த்து ஒரு கொதிவிடவும். பின்பு தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கி, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்தால் மரவள்ளிக்கிழங்கு பட்டாணி தேங்காய்ப்பால் கிரேவி தயார்

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Related articles

Recent articles

spot_img