health tips - 2026

அப்பாச்சி தீர்வு: சருமப் பராமரிப்பு, ஈறுபலப்பட, சுறுசுறுப்பாக, கண்பார்வை, சளி..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

கோதுமைத் தவிட்டிலே மருத்துவம்

கோதுமைத் தவிட்டை உடம்பிற்குத் தேய்த்துக் குளித்து வர சருமம் பளபளக்கும். சரும வியாதிகள் நீங்கும். சரீரத்தின் உட்சூடு குறையும்.

ஈறுகள் பலப்பட…

இலவங்கத்தை இலேசாக நெருப்பில் சுட்டு வாயில் அடக்கிக் கொண்டு உமிழ்நீரை விழுங்கி வர தொண்டைக் கம்மல் சரியாவதோடு பல் ஈறுகளுக்கும் நல்ல வலுவைக் கொடுக்கும்.

சுறுசுறுப்பு வேண்டுமா?

இலுப்பை இலைகளை வேக வைத்து அரைத்து உடலில் தேய்த்து சற்று நேரம் ஊறிக் குளிக்க உடம்பில் தெம்பும் சுறுசுறுப்பும் உண்டாகும்.

கண் பார்வை பளிச்சிட..

பிஞ்சு கடுக்காயையும் நெல்லி வற்றலையும் தூள் செய்து சம அளவு எடுத்து கலந்து இரண்டு அவுன்ஸ் நீரில் கால் தோலா அளவு தூள் கலந்து பாதியாக சுண்டக் காய்ச்சி சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வர கண் பார்வை பளிச்சிடும்.

அம்மான் பச்சரிசி மருத்துவம்

அம்மான் பச்சரிசி இலைகளை சாறு பிழிந்து சிறிது சர்க்கரை சேர்த்து ஓர் அவுன்ஸ் அளவு உள்ளுக்குக் கொடுக்க சுவாசச் சீர்கேடுகள். இருமல், காசம், வெட்டை நோய், மார்பு வலி, இசிவு அனைத்தும் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.