202204022245576319 temple fest SECVPF - 2026

கும்பகோணம் ராமசாமி கோவிலில் இன்று தேரோட்டம் ..

சற்றுமுன்

தென்னக அயோத்தி
கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராம நவமியை முன்னிட்டு இன்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் ராமசாமி கோவில் தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப இக் கோயிலில் ராமர் பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கிறார். ராம நவமி விழா இங்கு ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

இன்று ராம நவமியை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி 10 நாட்கள்  சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ராமநவமி விழா பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, , கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றி திருவிழா துவங்கி நடைபெற்றுவருகிறது.  

விழா நாட்களில்  அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் மற்றும் தாயார் வீதிஉலா நடந்தது.    கடந்த 5-ம் தேதி(செவ்வாய்க்கிழமை) தங்க கருடசேவை நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக இன்று ஞாயிற்றுக்கிழமை ராமநவமியை முன்னிட்டு ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகியோருடன் தேரில் எழுந்தருள தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

202204022245576319 temple fest SECVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.