halwa - 2026

நொடியில் தயார்.. பொடி அல்வா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
halwa - 2026

அல்வா

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 300 கிராம்
ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
அல்வா கலர் – அரை டீஸ்பூன்
முந்திரி – 8 (நறுக்கவும்)
பால் – 300 மில்லி.

செய்முறை:
கடலைப்பருப்பையும் பாசிப்பருப்பையும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு சிவக்க வறுத்து, ஆறியதும் பொடித்து பாலுடன் கலந்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்த்து, அது மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு, பிசுபிசுப்பு பதத்தில் பாகு காய்ச்சி பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். இடையிடையே நெய்விட்டு, மற்ற பொருள்களையும் சேர்த்து, பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.