health tips - 2026

அப்பாச்சி தீர்வு: மூலம், மூலக்கடுப்பு, உஷ்ணம், உதிரப்போக்கு, கண்ணில் பூ..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

மாதுளம் பூ மருத்துவம்

மாதுளம் பூ சாற்றில் அதிமதுரத்தை அரைத்து சுண்டைக்காயளவு பாலில் சாப்பிட்டு வர தேக உஷ்ணம் போகும். உடல் குளிர்ச்சி ஏற்படும். மூலாதாரச் சூடு தணியும். மூலக் கடுப்பும் குணமாகும்.

கண்ணில் பூ விழுந்து விட்டதா?

சில மல்லிகைப் பூக்களைக் கசக்கி இரண்டு சொட்டுக்கள் பூ விழுந்த கண்ணில் விட்டு வர பூ மறையும். ஆனால், இதை ஆரம்ப நிலையில் செய்தால் தான் பலன் கிடைக்கும்.

.உதிரச்சிக்கலைப் போக்க…

இலவங்கப்பட்டை 20 கி, சீமை செவ்வந்திப்பூ 20 கி எடுத்து இடித்து ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி 100 மி.லி அளவிற்கு சுண்டியதும் இறக்கி கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலத்தில் காலையிலும் மாலையிலும் சிறிது சிறிதாக கொடுத்து வர எந்தவித இரத்தச் சிக்கலும் இல்லாமல் சுகப் பிரசவமாகும்.

தளர்ச்சி நீங்க…

பசும்பாலைக் காய்ச்சி அதில் 20 கி அளவு இலுப்பைப் பூக்களைப் போட்டு காலையும் மாலையும் கற்கண்டு சேர்த்து பருகி வர நரம்புத் தளர்ச்சி அடியோடு நீங்கும்.

அம்மை நோய் குணமாக…

செந்தாழம் பூவின் பத்து. பன்னிரண்டு மடல்களை மெல்லியதாகக் கிழித்து ஒரு பெரிய மண் சட்டியில் போட்டு நிறைய தண்ணீர் ஊற்றிச் சுண்டக் காய்ச்சி இறக்கி வைத்துக் கொண்டு காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்குக் கொடுத்து வர அம்மை நோய் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.