health tips - 2026

அப்பாச்சி தீர்வு: ஆஸ்துமா, நாவறட்சி, இந்திரியம் பெருக, சூதகவாயு, இருதயநோய்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

ஆஸ்துமாவுக்கு…

கல்யாண முருங்கை இலையை ஒரு பிடியளவு எடுத்து நறுக்கி நன்றாக அரைத்து அரிசி மாவுடன் கலந்து வெங்காயத்தையும் நறுக்கிப் போட்டு அடையாகத் தட்டி ஆவியில் வேக வைத்து சாப்பிட ஆஸ்துமா. அதனால் ஏற்படும் இருமல், இளைப்பு எல்லாம் குணமாகும். ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

அடிக்கடி நாவறட்சி ஏற்படுகிறதா?

நுணா இலையை 35 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, 20 கி சீரகம். 35 கி நெல் பொரி, மூன்றையும் ஒரு சட்டியிலிட்டு ஒரு லிட்டர் நீர் விட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி இளஞ்சூட்டுடன் குடித்து வர தாகம் தணியும். நாவறட்சி நீங்கும்.

இந்திரியம் பெருக…

சிறிதளவு கொத்துமல்லிக் கீரையை தொடர்ந்து நாற்பது நாள்கள் மென்று தின்று வர இந்திரியம் பெருகும்.

சூதக வாயு சரியாக…

பிரண்டையை இடித்து சாறு பிழிந்து விளக்கெண்ணெய் சம அளவு சேர்த்து ஒரு நாளைக்கு ஓர் அவுன்ஸ் ஒரு வேளை சாப்பிட்டு வர சூதக வாயு, சூதக வலி அனைத்தும் குணமாகும்.

இருதய நோய் சரியாக…

நெருஞ்சில் செடியின் இளந்தளிர்கள், பூக்கள், இளம் பிஞ்சுகள் ஆகியவற்றை சுத்தம் செய்து கீரையைப் போல் அவித்து சாப்பிட்டால் இருதய நோய்கள் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.