health tips - 2026

அப்பாச்சித் தீர்வு: ‌‌முகவறட்சி, காதுவலி, காதுபுண், பல்வலி..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

முகவறட்சி அகல

வெள்ளரிக்காய்களை வட்டவட்டமாக நறுக்கிக்கொண்டு அதை அப்படியே முகத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை வைத்திருக்கவேண்டும். இவ்வாறுசெய்து வந்தால் முகவறட்சி நீங்கும், முகத்திற்கு பளபளப்பு உண்டாகும்.

காதுவலி அகல

காதுக்குள் ஏற்படும் கடுமையான நமைச்சல்கள், சீழ் கசிந்து வெண்மையான படலம் துர்நாற்றத்தை உண்டாக்கி காது கேளாமல் மந்தமாக்குவது போன்றவை களை நீக்க பின்வருமாறு செய்யவேண்டும்.

இஞ்சி, பூண்டு இவ்விரண்டுடன் துளசி இலையின் தளிரைச் சம அளவாய்க்கலந்து சாறெடுக்க வேண்டும். இந்தச்சாற்றில் மூன்று சொட்டுக்களை, மூன்று நாட்கள் தொடர்ந்து காதில் இட்டுவந்தால் அனைத்து வேதனைகளும் தீரும்.

காதுப்புண்கள், காது வலி

சிறிய வெங்காயத்தின் மேல் தோலைப் போக்கி இடித்துச் சாறெடுக்கவும், இந்தச்சாற்றில் இரண்டு, மூன்று துளிகள் காதில் விட காதுவலி, காது புண்கள் குணமாகும்.

பல்வலி

சுக்கை பற்களினால் கடித்து மென்று தின்றால் பல்வலி உடனே குறைந்து விடும். பல்வலி, கூச்சம், வீக்கம்

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

ஒரு தேக்கரண்டி அளவு உப்பை ஒரு டம்ளர் வெந்நீரில் சேர்த்து கலக்கு தினமும் இருவேளை வாய் கொப்பளித்துவர பற்களின் எகிர் வீக்கம், பற்கூச்சம், பற்களினின்று இரத்தம் வருதல் போன்றவை குணமாகும். பல் நோயினால் வரும் தலைவலியும் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.