2 exams start across tamil nadu 1 - 2026

1-9வகுப்பு மாணவர்களுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை ..

சற்றுமுன்

1முதல்9வகுப்பு மாணவர்களுக்கு மே 14 முதல் ஜூன் 12ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். மற்ற நாட்களில் வரத்தேவை இல்லை என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நாளை வெள்ளிக்கிழமை முடிவடைகின்றன. இதனையடுத்து, நாளை மறுநாள் மே 14 முதல் ஜூன் 12ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 exams start across tamil nadu 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.