சிதம்பரம் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published:

p chidambaram - 2026

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பில், தனக்கு முன்ஜாமீன் தர மறுத்த தில்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும், ஜாமீன் தேவை எனில் விசாரணை நீதிமன்றத்தையே சிதம்பரம் அணுகலாம் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து, பல முறை இடைக்கால தடை விதித்து வந்தது நீதிமன்றம்! 25வது முறையாக இடைக்காலத் தடை விதிக்கப் படுமா என்று எதிர்பார்த்திருந்த நிலைஇல், திடீர் திருப்பமாக, சிதம்பரத்தை கொள்ளைக் கூட்டத் தலைவர் என்று வற்ணித்து, அவருக்கு இதற்கு மேல் முன்ஜாமீன் கொடுக்க இயலாது எனக் கூறி, சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதை அடுத்து அவர் சிபிஐ காவலில் எடுக்கப் பட்டு, வழக்கு குறித்து சிபிஐ., விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்று கூறியது சிபிஐ!

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!
supreme court of india - 2026

உயர் நீதிமன்றத்தால் முன் ஜாமீன் மறுக்கப் பட்ட நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப் பட்டது! ஆனால், இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் முன்பே சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஐ., கட்டுப்பட்டில் காவல் வைக்கப் பட்டார்.

இந்நிலையில், சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் சிபிஐயால் சிதம்பரம் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விட்ட நிலையில், முன்ஜாமீன் கோரும் மனு பொருளற்றது என்று கூறி அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், சிதம்பரத்துக்கு ஜாமீன் தேவை என்றால் அவர் விசாரணை நீதிமன்றத்தையே அணுகலாம் என்று கூறினர்.

Related articles

Recent articles

spot_img