வெப் சீரிஸ்ஸில் சீரியஸாக உள்ள சமந்தா !

Published:

samantha - 2026
file pic

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். இதனைத்தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவாவில் திருமணம் செய்து கொண்டனர்.

samantha 3 - 2026
file pic

நடிகை சமந்தா கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைப்பெற்றது.
இதைத்தொடர்ந்து நடிகை சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.

samantha1 - 2026
file pic

சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஓ பேபி’. தெலுங்கில் உருவான இந்தப் படத்தை நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ‘மிஸ் க்ரானி’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும்.

samantha 2 - 2026
file pic

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘96’ தெலுங்கு ரீமேக்கில் மட்டுமே நடித்து வந்தார்.இந்த படத்திற்கு கட் அவுட் எல்லாம் வைத்து ரசிகர்கள் அசத்தியிருந்தனர். பின்னர் வேறு எந்தவொரு புதிய படத்திலுமே அவர் ஒப்பந்தமாகவில்லை. எனவே அவர் கர்ப்பமாக இருக்கலாம் என செய்தி பரவியது.

Samantha 4 - 2026
file pic

இது குறித்து விசாரித்த போது, அவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவது தெரிந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் சென்னையில் தான் நடைபெற்று வருகிறது.

samantha 5 - 2026
file pic

இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். மேலும், ‘96’ தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பையும் எப்போதோ முடித்துவிட்டாராம் சமந்தா. இந்த வெப் சீரிஸ் தனக்கு புதியதோர் பரிமாணத்தைக் கொடுக்கும் என்று நம்பிக்கையுடன்
இருக்கிறாராம். ஆகையால் வெப் சீரிஸ் பணிகளை முடித்துவிட்டுத் தான் புதிய படத்துக்கான கதை கேட்கும் பணிகளைத் தொடங்கவுள்ளாராம்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img