நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த நபர்!

இந்தியா கிரைம் நியூஸ் புகார் பெட்டி
parliment - 2026

நாடாளுமன்ற வளாகத்தில் ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்த நபரை நாடாளுமன்ற காவல் நிலைய வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது. தற்போது, கூட்டத்தொடர் எதுவும் நடக்கவில்லை என்றாலும், எப்போதுமே உச்சபட்ச கண்காணிப்பு பகுதியாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை பைக்கில் வந்த ஒருநபர் கேட் எண் 1 வழியாக ”ராம் ரஹிம்” என்று கோஷம் எழுப்பியவாறு உள்ளே நுழைய முயன்றுள்ளார்.

காவல்துறையினர் அந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவரிடம் கத்தி இருந்துள்ளது. பின்னர், அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், பிடிபட்ட நபர் தில்லி லக்‌ஷ்மி நகரில் வசிக்கும் சாகர் இன்ஸா என்று தெரியவந்துள்ளது. பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் டேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர் என்றும் தெரியவந்துள்ளது. குர்மீத் ராம் ரஹீம் தற்போது, பாலியல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.