மத்த திருடனுங்களை எல்லாம் கைது செய்யாம என்ன மட்டும் கைது செய்தீங்களே ஏன்..?

இந்தியா சற்றுமுன்
chidambaram behind bars - 2026

அய்யா நான் தப்பு செய்யலை! ஆனா வேற யாரையும் ஏன் கைது செய்யல!? – ப சிதம்பரம்

அய்யா என்னைவிட அதிகம் கொள்ளையடித்த தயாநிதியை ஏன் கைது செய்யல? : கார்த்திக் ப சிதம்பரம்

இப்படித்தான் பொருள் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள், இன்றைய ப.சிதம்பரத்தின் டிவிட்டர் பதிவினைப் பார்த்த பலர்!

எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை, அதிகாரிகள் கைது செய்யப்படுவதை நான் விரும்பவில்லை – என்று ப.சிதம்பரம் சார்பாக அவரது குடும்பத்தார் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்! இதனை ப.சிதம்பரத்தின் டிவிட்டர் பதிவு குறிப்பிடுகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்துள்ளது சி.பி.ஐ.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவின் படி அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் சிதம்பரத்தின் எண்ணத்தை அவர் சார்பாக குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அதில்,

“ என் சார்பாக இதில் கருத்து பதிவிட என் குடும்பத்தினரைக் கேட்டுக் கொண்டேன். `இந்த வழக்கு தொடர்பான கோப்புகளைப் பரிந்துரை செய்த அதிகாரிகள் பலர் கைது செய்யப்படவில்லை. ஆனால் இறுதியாகக் கையொப்பமிட்ட நீங்கள் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்?’ என்று மக்கள் என்னைக் கேட்கின்றனர். அதிகாரிகள் யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே யாரும் கைது செய்யப்படவேண்டும் என நான் கருதவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, ஆறு உறுப்பினர்களைக் கொண்ட வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தில் உள்ள அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் மட்டுமே தாம் கையொப்பமிட்டதாகவும், அதிகாரிகள் மேல் எந்தத் தவறும் இல்லை என்பதால் அவர்கள் எவரும் கைது செய்யப் பட வேண்டும் என்று தாம் கருதவில்லை என்றும், இறுதியாகக் கையொப்பம் இட்ட தாமும் எந்தத் தவறும் செய்யவில்லை என்ற நிலையில் தாம் மட்டும் ஏன் கைது செய்யப் பட்டுள்ளோம் என்பதைக் குறிப்பிடுவதற்காக ப.சிதம்பரம் இவ்வாறு டிவிட்டியுள்ளார் என்றும் டிவிட்டர்வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.