இது… சந்திரயானின் நெசக் கதை! நெல்லைத் தமிழ்ல படிச்சிப் பாருங்க!

சந்திரயான் என்றால் என்ன, அதன் பின்னணி, இப்போதைய அதன் நிலை என நெல்லைத் தமிழ் வட்டார வழக்கில் விளக்கும் இந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது~ வாட்ஸ்அப் பயனர்!

isro chandrayaan2

ஏலே கூகுளு (Okay Google)…

ஏண்ணேன் சொல்லுங்க… என்ன விசியம்?

ஏலே சந்திரயானுக்கு என்னாச்சி? ஏன் எல்லாவனும் சலம்பிக்கிட்டு கெடக்கானுவ…?

அது ஒன்னும் இல்ல அண்ணாச்சி, ஒங்களுக்கு வெளங்குத மாதிரி சொல்லுதேன், விக்ரம்ன்னு ஒரு வண்டி இருக்குல்லா அது நெலாவோட தர மேல நல்ல பவுசா மெதுவா எறங்கணும் கேட்டுக்கிடுங்க…

ஓ சரில…

ஆனா கெரகம் அது தரையைத் தொடதுக்கு ஒரு கா மைலுக்கு முன்னாடி நம்ம கூட இருந்த போன் கனெக்ஷன் அத்துக்கிருச்சி…

அடக் கெரகமே… சரி பெறவு என்னல ஆச்சி? அது எறங்குச்சா இல்லியால?

அதான் அண்ணாச்சி இன்னும் ஒரு எழவும் தெரில.

வெளங்கும்ல. சரி இப்போ என்னாதாம்லே வழி?

நெலாவ ஒரு வண்டி சுத்துல்லா…

ஆமா டே, அதைக் கூட ஆர்பிட்டர்ன்னு கூப்பிடுவாவல்லா…

ஏ அண்ணாச்சி நீங்க சார்ப்பு. அந்த வண்டி நெலாவ இன்னும் ஒரு வருசம் ரவுண்டடிக்கும். அப்டிக்கா ரவுண்டு அடிக்கற டைம்ல அது கண்ல விக்ரம் படுதான்னு பாக்கலாம்.

ஓஹோ…

chandrayaan lander

மெதுவா பவுசா எறங்க வேண்டிய விக்ரம் வண்டி, மெதுவா பாதகம் எதுவும் இல்லாம எறங்கி சொகுசா இருக்கா இல்ல வேகமா தரைல பொய் முட்டிக்கிட்டு விழுந்து ஒடஞ்சி கிடஞ்சி போச்சான்னு தெரில அண்ணாச்சி..

அதெல்லாம் பயலுக்கு எதுவும் ஆகியிருக்காதுல…

த்ரஸ்டர் கோளாறு ஆயிருந்தா அப்படி ஆகி இருக்கலாமாம் அண்ணாச்சி. மனசு கெடந்து பெசயுது அண்ணாச்சி…

அது என்ன எழவுடே த்ரஸ்டரு?

இந்த விக்ரம் ஒருமணிக்கு 21600 குலோமீட்டரு ஸ்பீடுல போவுது அண்ணாச்சி. அப்படி போகதுக்கு சத்து வேணும்லா? அதத் தான் இந்த த்ரஸ்டரு குடுக்கும்.

இந்தக் கார்லலாம் இஞ்சினு இருக்கும்லா, அது மாதிரியாடே?

கரெக்டு அண்ணாச்சி. இந்த த்ரஸ்டரு பியூயலை நல்ல எரிய வுடும். அது எரியரனால கெடைக்கற பொகையை ஓட்டவழியா பீச்சிக்கிட்டு அடிக்கும். அதுமூலமா கெடைக்கற சத்துல தான் அண்ணாச்சி இந்த வண்டி நவரும்.

அந்த த்ரஸ்டர் ஒக்குட்டுருச்சா டே?

இந்த வண்டி 21600 கிமீ இஸ்பீடுல போவுதுன்னு சொன்னம்லா அது எறங்கும் போது வெறும் 7 கிமீ ஸ்பீடுல எறங்கணும் அண்ணாச்சி. இந்த 21600 ல இருந்து 7 கிமீ ஸ்பீடுக்கு வெறும் 15 நிமிசத்துல கொறச்சாவணும்.

அது எப்படிடே கொறைக்கும்? வண்டி காத்துல பறக்கறனால பிரேக்கும் கெடையாதுல்லா டே?

chandrayaan2 tweet jeffbezo

சூப்பர் அண்ணாச்சி. ஒங்களுக்கு வெவரம் ஜாஸ்தி. இந்த பிரேக்கு மாதிரி விஷயம்லாம் இந்த வண்டிக்கு சான்ஸு கெடயாது. அதுனால இந்த த்ரஸ்டர்கள எதிர் பக்கமா திருப்பிருவாக. அப்போ எதிர்த்தாப்புல கெடைக்கற போர்ஸுனால விக்ரமோட இஸ்பீடு கொறைஞ்சிரும் அண்ணாச்சி.

ஏலே சூப்பரு. சரி அப்பறம் என்னாச்சி?

விக்ரம் நல்லாத் தான் அண்ணாச்சி ஸ்பீடைக் கொறச்சி எறங்குச்சி. ஆனா கா மைலு தூரம் வரைக்கு வந்த அப்பறம் அது கூட நமக்கு கனெக்ஷன் அத்துக்கிருச்சி அண்ணாச்சி. அதுனால விக்ரம் பவுசா எறங்குச்சா இல்லை மோதி ஒக்கிட்டிருச்சான்னு தெரியல அண்ணாச்சி இன்னும் எதுவும்.

கெரகம்ல. சரிடே அந்த ஆர்பிட்டர் வண்டிக்கும் இந்த விக்ரம் கனெக்ஷன் இல்லையாடே? விக்ரம் வண்டிக்கு என்னாச்சின்னு ஆர்பிட்டர் கிட்ட கேட்டுப்பாத்தா என்னா?

கனெக்ஷன் உண்டு அண்ணாச்சி. ஆனா அந்தப் பயலுக்கும் இப்போ விக்ரமுக்கு என்னன்னு தெரியலையாம் அண்ணாச்சி. எதுனா பதில் கெடைச்சா சொல்லுதேன்னு சொல்லிருக்கான்.

என்னம்மோ போடே… வேற எதாச்சும் தகவலு கெடைச்சா சொல்லுடே…

சரி அண்ணாச்சி சொல்லுதேன்…

Chandrayaan2 (Nellai slang)சந்திரயான் என்றால் என்ன, அதன் பின்னணி, இப்போதைய அதன் நிலை என நெல்லைத் தமிழ் வட்டார வழக்கில் விளக்கும் இந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது~ வாட்ஸ்அப் பயனர்!

Advertisements