விதிமுறைகளை மதிக்காததற்காகவும், அதிக எடை கொண்ட பொருட்களை ஏற்றி சென்றதற்காகவும் ராஜஸ்தானை சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாட்டின் பல மாநிலங்களில், புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, போக்குவரத்து காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில்,தில்லியில் நடந்த வாகன சோதனையில், ராஜஸ்தானை சேர்ந்த பகவான் ராம் என்பவருக்கு சொந்தமான லாரியை பிடித்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எடையை ஏற்றி சென்றது, உரிய அனுமதி பெறாதது உள்ளிட்ட காரணங்களுக்காக, பகவான் ராமுக்கு ரூ.1.41,700 அபராதம் விதிக்கப்பட்டது. பகவான் ராம், அபராதத்தை டில்லி கோர்ட்டில் செலுத்தி, லாரியை மீட்டு சென்றார். புது சட்டம் அமலுக்கு வந்த பின்னர், அதிக அபராதம் செலுத்தியவர் இவர் தான்.
Delhi: A truck owner from Rajasthan paid challan amount of Rs 1,41,700 at Rohini court on September 9 for overloading the truck on September 5. pic.twitter.com/2P4G9JqDgR
— ANI (@ANI) September 10, 2019