தேசிய குடிமக்கள் பதிவேடு அசாமுக்கு மட்டுமல்ல; நாடு முழுவதற்கும்: அமித்ஷா!

Published:

amitsha speech - 2026
File picture

தேசிய குடிமக்கள் பதிவேடு அசாமுக்கு மட்டுமல்ல நாடு முழுவதற்கும் என்று கூறினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

எனவே நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) முறை அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது .

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற ஆங்கில நாளிதழ் ஒன்றின் நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா ஆகிய நாடுகளுக்கு சென்று இந்தியர்கள் சட்டவிரோதமாக வசிக்க முடியுமா? அப்படி இருக்கும்போது மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் சட்ட ஆவணம் இல்லாமல் இந்தியாவில் எப்படி தங்கலாம் என்று கேள்வியெழுப்பினார்.

எனவேதான் , நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த வேண்டும் என்று தாம் நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அஸ்ஸாமில் மட்டும் தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப் பட்டுள்ளது, அது நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும், தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படும் என்றார் அமித் ஷா.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

நாட்டின் குடிமக்கள் குறித்து தேசிய அளவில் பட்டியல் இருக்க வேண்டியது அவசியம்; என்ஆர்சி என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு; அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேடு அல்ல என்றார் அமித் ஷா.

Related articles

Recent articles

spot_img