டியூஷன் படிக்க சென்ற மாணவன்! ஆசிரியைக்கு செய்த விபரீதம்!

இந்தியா கல்வி
teacher 7 - 2026

மும்பையில் 12 வயது மாணவன் ஒருவன் தனது டியூஷன் ஆசிரியையை பல முறைக் குத்தியுள்ள சம்பவம் பீதியைக் கிளப்பியுள்ளது.

மும்பை சிவாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா அஸ்லம் ஹூசாய் என்ற பெண். இவர் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு தன் மகன் மற்றும் தாயோடு தனியாக வாழ்ந்து வருகிறார். வீட்டு செலவுகளுக்காக அபார்ட்மெண்ட்டில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து கொடுத்து வருகிறார்.

திங்கள் கிழமை அவரிடம் டியூஷன் படிக்கும் மாணவன் ஒருவர் அவரைக் கத்தியால் வயிற்றிலும் பின்புறத்திலும் குத்தியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மாணவனைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் தன் தாயிடம் டீச்சர் வாங்கிய கடனைக் கொடுக்காமல் ஏமாற்றியதால் குத்தியதாகக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.