புதுதில்லி: மக்கள் ரொக்கமாக சேமிப்பது 7 ஆண்டில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016 நவம்பரில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். கடும் பண தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் 2016-17 நிதியாண்டில் மக்கள் வீடுகளில் ரொக்கமாக சேமித்து வைப்பது 2 சதவீதம் சரிந்தது. இதுபோல், தேசிய ஒட்டு மொத்த வருவாய் 6.7 8.1 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக குறைந்தது. கடந்த நிதியாண்டில் இது 8.1 சதவீதமாக அதிகரித்தது.
தேசிய ஒட்டு மொத்த வருவாயில்,் மக்கள் ரொக்கமாக சேமித்து வைப்பது 2011-12ல் 1.2 சதவீதம், 2012-13ல் 1.1 சதவீதம், 2013-14ல் 0.9 சதவீதம், 2014-15ல் 1 சதவீதம் 2015-16ல் 1.4 சதவீதம் என இருந்தது. டெபாசிட்களாக சேமிப்பது தேசிய ஒட்டுமொத்த வருவாயில் 2016-17ல் 6.3 சதவீதமாகவும், கடந்த நிதியாண்டில் 2.9 சதவீதமாகவும் இருந்தது.
வங்கி டெபாசிட்கள் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ஆண்டை தவிர 2012-13 நிதியாண்டுக்கு பிறகு குறைந்து வந்துள்ளது என ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.




