புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோரை நீக்குவதாக முடிவு செய்யப்பட்டது. இருவருக்கும் எதிராக 200க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளதால் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அஜித் ஜா, ஆனந்த் குமார் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று மதியம் பூஷணும், யாதவும் செய்தியாளர்களைச் சந்தித்து உண்மை நிலையைச் சொல்வதாக தகவல் அளித்துள்ளனர். இதனிடையே, தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அடிதடி, ரகளை வன்முறைகள் நடைபெற்றதாகக் கூறப்படுவதை, அக்கட்சி மறுத்துள்ளது. கூட்டம் சுமுகமாக நடைபெற்றதாகக் கூறியுள்ளது. முன்னதாக, இன்று காலை கூட்டம் தொடங்கும் முன்னர், யோகேந்திர யாதவ் தலைமையில், ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்ஆத்மியின் தேசிய குழு கூட்டம் நடைபெறும் கட்டடத்தின் வாசலில் அமர்ந்து யோகேந்திர யாதவ் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார். கூட்டத்தில் கலந்து கொள்ள முறையான அழைப்பு இருந்தும் உறுப்பினர்கள் சிலர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி அவர், தனது ஆதரவாளர்கள் சிலருடன் தர்ணாவில் ஈடுபட்டார். கேவலமாகத் திட்டும் கேஜ்ரிவால்! முன்னதாக, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது எதிர்ப்பாளர்களை மோசமாகத் திட்டும் குரல் பதிவு வெளியானது. கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக கட்சியை நிறுவிய உறுப்பினர்களில் முக்கியமானவர்களான பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் கட்சியில் வெளிப்படை தன்மை, உள்கட்சி ஜனநாயகம் என்பது உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து கேஜ்ரிவாலுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த இருவரையும் குறித்து ஒரு வாரத்துக்கு முன் கேஜ்ரிவால் தனது ஆதரவாளரிடம் பேசுவது ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ‘வேறு கட்சியாக இருந்தால் இந்நேரம் அவர்கள் இருவரையும் கட்சியைவிட்டே துரத்தியிருப்பார்கள்’ என்று கூறியுள்ளார். மேலும் அவர் 67 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆம் ஆத்மி கட்சியைவிட்டே வெளியேறிவிடுவேன் என்று அவர் சொல்வதையும் கேட்க முடிகிறது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மூத்த தலைவர் ஒருவர் நாம் கோபப்படும்போது நிதானம் இழந்து இதுமாதிரி பேசிவிடுவது இயல்புதான் என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து பூஷண், யாதவ் நீக்கம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories