திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை வழிபாடு..

Published:

875992 cni22sep1621 - 2026

ஆவணி கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்து பிரசாதம் பெற்றனர் .

திருவள்ளூர் திருத்தணி முருகன் கோவில் அறுபடைவீடுகளில் முருகபெருமானின் புகழ்பெற்ற 5-ம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் கிருத்திகை தினத்தையொட்டி மூலவர் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு ஆராதனைக்கு பிறகு தங்க கவச அலங்காரத்தில் மூலவர் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பொது வழியில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். அதேபோல் ரூ.100 மற்றும் ரூ.150 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img