மோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’! இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
selfie withmodi - 2026

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் மாபெரும் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, டிரம்ப், மோடி இருவரும் கை பிடித்தபடி அரங்கை வலம் வந்தனர்.

பாரம்பரைய நாட்டியம் நடத்திய குழுவினருடன் ஓரமாக ஒரு சிறுவனும் நின்றிருந்தார். பிரதமர் மோடி அவர்களைக் கடந்து சென்றுவிட பின்னால் வந்த டிரம்ப் சற்று நின்றார். சிறுவனைப் பார்த்து ஏதோ கேட்க, உடனே மோடியும் அருகே வந்து நிற்க, சிறுவன் ஓரிரு நொடிகள் அவர்களைத் தன் வசமாக்கி, ஒரு செல்ஃபியைக் கிளிக்கினான்.

இன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.

யார் அந்த அதிர்ஷ்டசாலி சிறுவன் என்று எல்லோரும் சமூகத் தளங்களில் மேய்ந்தார்கள். அந்தச் சிறுவன், கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னடா மாவட்டம் சிர்ஸியை பூர்வீகமாகக் கொண்ட சாத்விக் ஹெக்டே.

இது குறித்த சில பதிவுகள்…

மகன் வாங்கித் தந்து விடுவான்எனும் எண்ணத்தில் வாழும் , செல் தட்டிவிடும் நடிகர் சிவகுமார் க்கு சமர்ப்பணம்
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
(திருக்குறள்)

அந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய இரு மாபெரும் தலைவர்கள்.
அந்த மாபெரும் அவையில் தன் கையிலிருந்து விழுந்த பூங்கொத்தை தானே எடுத்து கொடுத்த மோடியின் பண்பாடு போற்றுதலுக்குறியது. சங்கம் ஒரு பண்பட்ட தலைவனை பாரதத்திற்கு கொடுத்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.