விலை உயர்வு எதிரொலி: வெங்காயம் ஏற்றுமதி செய்யத் தடை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
onion1 - 2026

வெங்காயம் விலை அதிகரித்து வருவதால், விலை உயர்வை கட்டுப் படுத்தி, செயற்கை தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அண்மையில் பெய்த கனமழையால் வெங்காய விளைச்சர் பாதிக்கப் பட்டது. இதனால் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை பன்மடங்கு உயர்ந்து வருகிறது.

பண்டிகைக் காலம் வேறு என்பதால், வெங்காயத்தை பதுக்கி, அவற்றை கூடுதல் விலைக்கு விற்க வியாபாரிகளும் முயற்சிகளைச் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஆன்லைன் வர்த்தகம் செயற்கை தட்டுப்பாடை உருவாக்கி, விலையை ஏற்றி வருகின்றனர் ஆன்லைன் வியாபாரிகள்.

இதனால், நாடு முழுவதும், வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. இதை அடுத்து உள்நாட்டில் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வெங்காய ஏற்றுமதிக்கான இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.