அம்பேத்கர் படத்தை வணங்கி… இந்து கடவுளர் படங்களைக் கிழித்து எரித்த ஒருவன் கைது!

Published:

Rayagada picture - 2026

ஒடிசா: ராயகடாவில் அம்பேத்கர் படத்தை கும்பிட்டு விட்டு, இந்து தெய்வங்களின் படங்களை கிழித்து, எரித்ததற்காக ஒருவன் கைது செய்யப்பட்டான்

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் இந்து தெய்வங்களின் படங்களைக் கிழித்து எரித்ததுடன், அது குறித்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

குற்றம் சாட்டப்பட்டவன், டிக்கிரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பஞ்சாலி கிராமத்தைச் சேர்ந்த அகஸ்தி கரடா என அடையாளம் காணப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தனது கூட்டாளிகளின் உதவியுடன் இந்து தெய்வங்களின் படங்களை எரித்துள்ளான்.

இந்திய அரசியலமைப்பை மட்டுமே நம்புவதாகக் கூறி, இந்து தெய்வங்களின் படங்களை கிழித்து எரித்த முழுச் செயலும் வீடியோ ஆக்கப்பட்டு பின்னர் சமூக ஊடக தளங்களில் வைரலாக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர், வேறு சிலருடன், முதலில் அம்பேத்கரின் படத்தை வணங்கினார், பின்னர் இந்து தெய்வங்களின் படங்களை எரித்தார். இந்த வீடியோ வைரலாகி, சமூகப்பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதை அடுத்து, பதற்றத்தைத் தணிக்க, சுயமாக முன்வந்து நடவடிக்கை எடுத்த ரெய்கடா போலீசார், உடனடியாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) சட்டவிரோத (143 ஏ) பிரிவுகளின் கீழ் கைது செய்தனர், பிற வகுப்பினரை அவதூறு செய்தல் (295, 295 ஏ) மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலத்தை சிதைப்பது அல்லது அவமானப்படுத்துதல், மற்றும் குற்றவியல் சதி (120 பி) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

சர்பனா பிபெக் (காவல்துறை கண்காணிப்பாளர் ராயகடா) கூறுகையில், “சமூக ஊடகங்களில் ஒரு இனவாதத்தினை ஏற்படுத்தும் வீடியோ வைரலாக்கப் படுவது குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. அந்த வீடியோவைக் கவனித்து விசாரித்த பின்னர், அந்த வீடியோவின் அடிப்படையில், ராயகடா தானாவில் புகார்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, புகாரின் அடிப்படையில் நாங்கள் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளோம். வழக்கு எண் ஐபிசியின் 345/19, யு / எஸ் 153 ஏ, 295, 295 ஏ, 34 மற்றும் 120 பி. இந்த வீடியோவை பகிர வேண்டாம் என்று மற்றவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். பிரதான வீடியோ பகிர்வும் ஒரு குற்றம். ” என்றார்.

Related articles

Recent articles

spot_img