வீர சாவர்க்கருக்கு பாரதரத்னா கோருகிறது பாஜக!

Published:

Vinayak Damodar Savarkar - 2026

இந்திய சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.

சுதந்திரப் போராட்ட தியாகி வீர சாவர்க்கர்,  சமூக நீதிப் போராளி மகாத்மா ஜோதிபா பூலே, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலே ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் அறிக்கையில்  மகாராஷ்டிரா முதல்வர், ஜேபி நட்டா விருது வழங்க வலியுறுத்துவோம் என்றனர்  .

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

வரும் 5 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.

பெண்கள் சிறுசேமிப்பு குழுக்களுடன் 1 கோடி குடும்பங்களை இணைப்பதன் மூலம் சிறப்பு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகிக்கப்படும். இதற்காக மத்திய அரசுடன் இணைந்து ரூ. 5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

மாநிலத்தின் அனைத்து சாலைகளையும் சீரமைத்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் 5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவை வறட்சியின் பிடியில் இருந்து முழுமையாக மீட்போம்.

கோதாவரியில் இருந்து வறட்சி பாதித்த வடக்கு மராத்வாடா பகுதிக்கு ஆற்று நீரை திருப்பிவிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – என்பது உள்ளிட்ட 16 பிரச்னைகள் பட்டியலிடப்பட்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன..

இதனிடையே இந்த வாக்குறுதி மக்கள் கோரிக்கை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது

IMG 20191015 WA0066 - 2026
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img