
ஆந்திரா தெலங்காணாவுக்கு மத்திய அரசு அளித்த குட் நியூஸ் இதுதான். இரு தெலுங்கு மாநிலங்களுக்கும் புதிதாக 16 ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது! ஆந்திராவுக்கு 9 பேர். தெலங்காணாவிற்கு 7 பேர் என 16 அதிகாரிகளை ஒதுக்கியுள்ளது.
ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இருவருக்கும் மத்திய அரசு இனிப்பான செய்தியை அனுப்பி உள்ளது. தெலுங்கு மாநிலங்களுக்கு புதிதாக 16 ஐஏஎஸ்.,களை அனுப்ப உத்தர விட்டுள்ளது.
இரு மாநிலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் போதுமான அளவு இல்லாமல் இருந்தார்கள். அதோடுகூட ஏற்கனவே இருந்த சிலரும் மத்திய அரசின் சர்வீசுக்கு சென்று விட்டார்கள். இந்த நிலையில் மாநில அரசின் திட்டங்களை சரியாக அமல்படுத்த வேண்டிய உயர் அதிகாரிகள் குறைவாக இருந்தனர் .
அதோடு தெலங்காணா மாவட்டங்களின் எண்ணிக்கை 10 லிருந்து 33 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் கூட மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் அதிக அளவு ஐஏஎஸ் அதிகாரிகளின் வரவு இனிய செய்தியாக வெளிவந்து உள்ளது.



