தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்!முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா!

indianteam - 2026

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியை வென்றது இந்தியா. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்தியா அணி சாதனை படைத்துள்ளது. 3வது டெஸ்ட் போட்டியை, 202 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்து, டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா இரட்டைச் சதம் விளாசி அசத்தினார். அவர் மொத்தம் 255பந்துகளில் 28 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 212 ரன் குவித்தார்.

அஜிங்க்ய ரஹானே, 192 பந்துகளில் 17 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 115 ரன் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவின் லிண்டே 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

இதை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-ஆம் நாளில் 162 ரன்களில் ஆட்டம் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹம்ஸா 62 ரன்களும், லிண்டே 37 மற்றும் பவுமா 32 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அறிமுக வீரர் நதீம், ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய அணியை விட 335 ரன்கள் பின்தங்கிய நிலையில், முதல் இன்னிங்க்ஸில் ஆட்டம் இழந்ததால், தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது.

4-ஆம் நாள் ஆட்டத்தில் 2-ஆவது இன்னிங்ஸிலும் 133 ரன்களில் அந்த அணி ஆட்டம் இழந்தது. ஷமி 3 விக்கெட்டுகளை எடுத்தார். உமேஷ் யாதவ், நதீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதையடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி, தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்தது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories