தெலங்கானா ஆர்டிசி தொழிலாளருக்கு ஆளுநர் தமிழிசை அளித்த நம்பிக்கை!

tamilisai soundarrajan - 2026

தெலங்காணா ஆர் டி சி தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளித்தார் ஆளுநர் தமிழிசை.

தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆர் டி சி தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது பற்றியும் வாடகை பஸ்களை எடுத்துக் கொள்ளும் விஷயத்தைப் பற்றியும் டிஆர்எஸ் அரசுடன் பேசுவதாக ஜேஏசி தலைவர்களிடம் தெரிவித்தார்.

ஆர்டிசி தொழிலாளர்கள் அவசரப்பட்டு தற்கொலை எதுவும் செய்து கொள்ளக் கூடாது என்றும், இந்த விஷயத்தில் அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் ஆளுநர் அவர்களிடம் குறிப்பிட்டார். ஆர்டிசி ஜேஏசி தலைவர்கள் ஆர்டிசி தொழிலாளர்களுக்கு தைரியத்தை எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர்களிடம் அறிவுறுத்தினார்.

நேற்று ஆளுநரை ஜேஏஸி ஒருங்கிணைப்பாளர் அஸ்வத்தாம ரெட்டி, இணை ஒருங்கிணைப்பாளர் ராஜா ரெட்டி, சுதா, விஎஸ் ராவ் மற்றும் தலைவர்கள் பலர் சந்தித்துப் பேசினர்.

அரசு தனக்கு நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என்று சாக்குப் போக்கு கூறி கால விரயம் செய்கிறது என்று ஆர்டிசி ஜேஏசி தலைவர்கள் ஆளுநரிடம் தெரிவித்தார்கள். உயர் நீதிமன்றம் அரசாங்கத்திடம் தொழிலாளர் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் படியும் ஆர்டிசி தொழிலாளர்ளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினாலும் அரசு எதையும் கண்டு கொள்ளவில்லை என்று அவர்கள் ஆளுநரிடம் கூறினர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!
rtc telangana3 - 2026

25 சதவிகிதத்திற்கு மேல் வாடகை பஸ்களை எடுத்துக் கொள்வதற்கு வழி இல்லை என்ற நிபந்தனைகள் இருப்பதாகவும் ஜேஏசி தலைவர்கள் ஆளுநரிடம் தெரிவித்தனர். வாடகை பஸ்களின் டெண்டர் வாங்கும் செயலை ரத்து செய்ய வேண்டும் என்று ஜேஏசி தலைவர்கள் ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை விடுத்தனர்.

போர்ட் ஆஃப் டைரக்டர்களின் அனுமதி இல்லாமலேயே ஆர்டிசி நிர்வாகமும் அரசும் ஒன்றாக சேர்ந்து 1035 வாடகை பஸ்களுக்கு டெண்டர் அனுப்பி விட்டதாகவும் கூறினர். அவர்கள் கூறியவற்றை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், இந்தக் கோரிக்கைகள் குறித்து அரசுடன் பேசுவதாக வாக்களித்தார். அதனால் நம்பிக்கை பெற்ற ஆர்டிசி ஜேஏசி தலைவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories