போக்குவரத்து பணியாளருக்கு தீபாவளி பண்டிகை முன்பணம்… நாளை!

Published:

vijayabhaskar karur - 2026

தமிழக போக்குவரத்து தொழிலாளர்களுக்கான தீபாவளி பண்டிகை முன்பணம், போனஸ் நாளை, நாளை மறுநாள் வழங்கப் படும் என்று கூறியுள்ளார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது,

தமிழகத்தில் இயங்கும் 8- அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நாளை தீபாவளி பண்டிகை முன்பணம் தலா 10 ஆயிரம் வழங்கப்படும் .

நாளை மறுநாள் தீபாவளி போனசாக தலா ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும். அதிகபட்சம் 16 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.

5- இருக்கைகள் கொண்ட குறைந்த தூரம் இயக்கக்கூடிய குளிர்சாதன பேருந்துகள் முக்கிய நகரங்களில் இருந்து 150 பேருந்துகள் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும்.

ஆண்டுதோறும் பண்டிகைக் காலத்தின் போது இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளும் சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் … என்று, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் .ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img