
தாய்லாந்து மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் நுாலை பிரதமர் மோடி நவ.2 சனிக்கிழமை நாளை வெளியிடுகிறார்.
தில்லியில் வெளியுறவுத்துறை கிழக்குப் பிரிவு செயலர் விஜய் தாக்குர் சிங் இது குறித்து தெரிவித்ததாவது…
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை அரசு முறை பயணமாக பிரதமர் மோடி செல்கிறார். தலைநகர் பாங்காக்கில் நடக்கும் ஆசியான் – இந்தியா கிழக்கு ஆசியா ஆர்.சிஇ.பி. என்படும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணி ஆகிய அமைப்புகளின் மாநாடுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு நவ. 2ம் தேதி செல்லும் பிரதமர் அங்கே வசிக்கும் இந்தியர்களை சந்தித்து உரையாடுகிறார். அப்போது தாய்லாந்து மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறளை வெளியிடுகிறார்.
மேலும், சீக்கிய மத நிறுவுனர் குருநானக் தேவரின் 550வது பிறந்த ஆண்டை முன்னிட்டு நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிடுகிறார்! – என்று தெரிவித்தார்.
பாங்காக்கில் உள்ள சுலாலாங்கோர்ன் பல்கலை பேராசிரியர் டாக்டர் சுவித் விபுல்ஸ்ரீஸ்த் திருக்குறளை தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அந்த நூலே நாளை வெளியிடப் படுகிறது.
தமிழ்நாடுநாள் பரிசு
தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்த திருக்குறளை நாளை பாரதப் பிரதமர் @narendramodi வெளியிடுகிறார். இங்கு தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு முன்பே ஐநா மற்றும் மகாபலிபுத்திற்கு சீன பிரதமரை அழைத்து தமிழின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்றுள்ளார்.