
அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளிக்க உள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இன்று உத்தரப்பிரதேச மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியை சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் நவம்பர் 17ம் தேதிக்குள் எந்த நாளில் வேண்டுமானாலும் தீர்ப்பு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வகுப்பு வாத அசம்பாவிதங்கள் ஏற்படமல் தடுக்க உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. அதேபோல் மற்ற மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில் உ.பி. தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று சந்திக்கிறார். அப்போது உத்தரப்பிரதேசம் மற்றும் அயோத்தியில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.