
பெரிய வெங்காயம் வாங்கினால் ஒரு டிசர்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2 நாட்களில் 1500 கிலோ வெங்காயம் விற்பனையானது.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பிரகாசன் (33). இவர் ஆட்சியர் அலுவலகம் அருகே மளிகை கடை வைத்திருக்கிறார். நாடு முழுவதும் வெங்காயத்தின் வரத்து குறைவாக இருந்ததால் அதன் விலை ரூ 100 வரை உயர்ந்தது.
இந்த நிலையில் வெங்காய விலையையொட்டி சலுகை வழங்கவுள்ளதாக அறிவித்தார். அதில் ரூ 400 கொடுத்து 5 கிலோ வெங்காயம் வாங்கினால் ஒரு டிசர்ட் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்பசி 2 நாட்கலில் 1500 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விலை உயரும் போது வாடிக்கையாளர்களின் மனதை கவர சில இலவசங்களை வழங்கினால் விற்பனை அதிகரிக்கும் என்றார் கடை உரிமையாளர் பிரகாசன்.