
அயோத்தி தீர்ப்பு மூலம் இந்திய வரலாற்றில் புது அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் டிவி மூலம் உரையாற்றினார். தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அவரது உரையில்….
அப்போது பிரதமர் மோடி கூறுகையில், என் மனதில் இருப்பதை நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று சிறப்பு மிக்க தருணம். நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
40 நாட்கள் தொடர்ச்சியான விசாரணைக்கு பின்னர் தீ்ர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கை தினசரி விசாரிக்க வேண்டும் என நாடு விரும்பியது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்; நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது
அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.
மக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது
மாரத்தான் விசாரணைக்குப் பின்பு தீர்ப்பு வந்துள்ளது
ஒட்டு மொத்த தேசமும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளது
வேற்றுமையில் ஒற்றுமையே நமது தாரக மந்திரம் – பிரதமர்.
நமது ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை உலகம் கண்டுள்ளது
”நீண்ட நாளாக நீடித்த பிரச்சனையில் உச்சநீதிமன்றம் நியாயமான தீர்ப்பு அளித்துள்ளது”
அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்றுள்ளது இந்தியாவின் சகிப்புத் தன்மையை உணர்த்துகிறது.
இந்திய நீதித்துறை வரலாற்றில் இது பொன்னான தருணம் – பிரதமர் மோடி.
ஒளிமையான எதிர்காலத்தை நோக்கி அனைவரும் பணியாற்ற வேண்டும்.
இந்தியாவை கட்டமைப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உள்ளது” என்றார் பிரதமர் மோடி.



