
அயோத்தி ராமஜன்ம பூமி குறித்த வழக்கில், தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த தகவலையும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
குறிப்பாக, சீக்கிய மத குரு நானக் தேவ் ஜி, அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்தது குறித்த வரலாற்றுக் குறிப்பைக் காட்டி, அது பாபர் இந்தியாவை ஆக்கிரமிப்பதற்கு முன்னர் என்று குறிப்பிட்டார்.
சீக்கிய மத, கலாச்சார மற்றும் வரலாற்றில் ஆர்வமுடையவர் என்ற முறையில் வழக்கு எண் 4இல் இரண்டாம் பிரதிவாதி தரப்புச் சாட்சியாக ஆஜரான திரு.ராஜேந்திர சிங் , சீக்கிய மதத்தின் பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களை மேற்கோளிட்டு, முதன்மை விசாரணையின் 11 ஆம் பத்தியில் கூறியதாவது..
சீக்கிய மத தலைவரான குரு நானக் அவர்கள், விக்ரம சகாப்தம் 1564 ( 1507 கி பி) இல் கடவுள் காட்சியளித்த பாத்ரபத பௌர்ணமி நாளில் புனித யாத்திரைக்குத் தயாராகி மூன்று நான்கு வருடங்கள் பயணித்து தில்லி, ஹரித்வார், சுல்தான்பூர் வழியாக அயோத்யாவுக்கு விக்கிரம சகாப்தம் 1567 (கி பி 1510) இல் சென்றடைந்து, ராமர் பிறந்த கோயிலுக்கும் விஜயம் செய்தார்… அப்போது முகலாயப் படையெடுப்பாளன் பாபர் பாரதத்தின் மீது படையெடுத்து வந்திருக்கவில்லை!
இது தொடர்பாக அவர் குருநானக் விஜயம் தொடர்பான பல்வேறு குறிப்புக்களையும் இணைத்திருந்தார்… என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி.

- ஆசார்ய லக்ஷ்மி நரசிம்மன்