
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகள் ‘உபாசனா கொணிதெல’ வின் நிர்வாகத் திறன் அனைவருக்கும் தெரியும்தான்!
அப்போலோ லைஃப், அப்போலோ பவுண்டேஷன் தலைவியாக அவரது நலம் விரும்பிகளுக்கும் ரசிகர்களுக்கும் தொடர்ந்து யூடியூப் வழியாக தொடர்பில் இருந்து வருகிறார்.
இதே தளத்தில் ஃபிட்னெஸ் அறிவுரைகளை அளித்து ஏகமாக ஃபாலோயர்களை சம்பாதித்து வைத்துள்ளார். சோஷியல் மீடியாவில் கணவரும் நடிகருமான ராம் சரண் தொடர்புடைய வேலைகளோடு கூட சினிமா செய்திகளைப் பற்றியும் விவரித்து மெகா ஸ்டார் ரசிகர்களோடும் ‘டச்’சில் உள்ளார்.
சோசியல் மீடியா வழியாக லட்சக்கணக்கில் ரசிகர்கள் இவரை ஆர்வத்தோடு ஃபாலோ செய்கிறார்கள். தற்போது, ஹைதராபாத்தில் உள்ள சிறந்த மகளிர் தொழில் முனைவோர்களில் ஒருவராக கௌரவிக்கப் படுகிறார் உபாசனா.
பல உலகளாவிய மகாநாடுகள், தொழிலதிபர்களின் கூட்டங்கள் போன்றவற்றில் அற்புதமாக உரையாற்றி அனைவரையும் கவர்ந்துள்ளார் .

பல சர்வதேச மேடைகளில் உபாசனா பாராட்டுக்களை பெற்றுள்ளார். ஆரோக்கியமான சமூக அமைப்புக்கான அவருடைய முயற்சி இளைஞர்களிடம் ஒவ்வொரு முறையும் நேர்மறையான சிந்தனையை நிரப்பி வருகிறது.
அண்மையில் உலக செல்வந்தர்களில் நம்பர் ஒன்னாக ஒளிவீசும் தி கிரேட் மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸை சந்தித்தார் உபாசனா.
இத்தகைய அரிய வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ட்வீட் செய்து அந்த ‘ஃபேன் மொமெண்ட்’ போட்டோவோடு தம்ஸ்அப் மெசேஜ் ஷேர் செய்துள்ளார்.
இந்தியன் பிலாந்தரபி இனிஷியேடிவ் ( ஐபிஐ ) மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்து அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
