
ஹைதராபாத் என்டிஆர் ஸ்டேடியத்தில் நிர்வகிக்கப்படும் கோடி தீபம் கொண்டாட்டங்களில் பதினைந்தாவது நாள் பூரி பீடாதிபதி நிச்சலானந்த சரஸ்வதி ஸ்வாமியும் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொண்டனர்.
அப்போது சந்திரபாபு நாயுடு பேசுகையில் ஹிந்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக பெண்கள் அனைவரும் வந்து இங்கு சேர்ந்து இருப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். கார்த்திகை மாதம் என்று சொன்னவுடனே வனபோஜனம் மற்றும் பக்தி டிவி நடத்தும் கோடி தீபாராதனை விளக்கேற்றுவதும் நினைவுக்கு வருகின்றன. நரேந்திர சௌத்ரி பக்தி டிவி யின் தலைவர். கடந்த 8 ஆண்டுகளாக கோடி தீபோத்ஸவம் நிகழ்ச்சியை நடத்துவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
பக்தியோடு பல மணி நேரம் ஆயிரக்கணக்கில் பெண்கள் இங்கு அமர்ந்திருப்பதைக் கண்டு வாழ்த்தி பாராட்டினார்.

அன்னவரம் சத்யநாராயண சுவாமியின் உற்சவ விக்ரகங்களை எடுத்து வந்து சத்தியநாராயண விரதம் அனைவரையும் செய்ய வைப்பது ஆனந்தத்தை அளிக்கிறது என்றார்.
ஸ்வாமிகளின் ஆசிகள் தேவதைகளின் வாழ்த்துக்கள் எல்லாம் பெறுவதென்பது சுபம் அளிக்கிறது என்றார். தன் சின்னஞ்சிறு வயதில் தன் கிராமத்தில் கார்த்திகை மாதத்தில் புனித பக்தியோடு விடியற்காலையிலேயே எழுந்து தீபம் ஏற்றியதை குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு தன் சிறுவயது காலத்தை நினைவு கூந்தார். ஆலயங்களை தரிசிப்பதால் மனோதைரியம் ஏற்படுகிறது என்றார். தெய்வத்தின் சந்நிதிகளில் தியானம் செய்தால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்றார் .
சந்திரபாபு பேசிய பின் மேடை மீது இருந்த பூரி பீடாதிபதி அவரை அழைத்து காதில் ஏதோ கூறினார். ஒரு வேளை அவர் ரகசியமாக சந்திரபாபுவின் காதில் ஏதாவது மந்திரோபதேசம் செய்திருப்பார் என்று பக்தர்கள் நினைத்தனர்.

ஆதிசங்கரர் பாரத தேசத்தில் சிருங்கேரி, பூரி, பதரி, த்வாரகா பீடங்களை ஸ்தாபித்தார். பூரியில் உள்ள கோவர்தன் பீடத்திற்கு 145 ஆவது பீடாதிபதிகளாக நிச்சலானந்த சரஸ்வதி சுவாமிகள் உள்ளார். அவர் பீகாரில் உள்ள மதுபனியில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே வேதங்களின் மீது பாண்டித்தியம் பெற்றார் .
1974இல் சன்யாச தீட்சை ஏற்றுக் கொண்டார். 1995 லிருந்து கோவர்தன பீடாதிபதியாக இருந்து வருகிறார். பூரி சங்கராச்சாரியார் ஸ்ரீ நிச்சலானந்தசுவாமி முதல் பூஜை செய்த பிறகே ஜகன்னாதர் ரத யாத்திரை ஆரம்பம் ஆகும். இதனைக் கொண்டே பூரி பீடத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். அவருக்கு வேத கணிதத்தின் மீது நிறைய நிபுணத்துவம் உண்டு.
சந்திரயான் 2 ஏவப் படுவதற்கு முன்பு இஸ்ரோ விஞ்ஞானிகள் சுவாமியின் அறிவுரைகளையும் கருத்துக்களையும் கேட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
ஞாயிற்றுக்கிழமை அன்று கோடி தீபோத்ஸவம் மேடைமீது ஸ்ரீ சத்ய நாராயண சுவாமி விரதமும் கல்யாணமும் நடத்தினார்கள். பின்னர் சேஷவாகனத்தின் மீது ஊர்வலம் எடுத்துச் சென்றார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.