ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போது செருப்பணிந்த அமைச்சர்.. விளக்கம்!

Published:

aiyappa maalai cheppel - 2026

ஐயப்ப தீட்சையில் காலுக்கு செருப்பு. ஆந்திர அமைச்சர் அவந்தி ஸ்ரீநிவாஸ் விளக்கம்.

ஐயப்ப தீட்சையில் இருக்கும்போது செருப்பணிந்து நடப்பது பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவற்றுக்கு பதில் அளித்தார் அமைச்சர் அவந்தி ஸ்ரீனிவாஸ்.

தெலுகு தேசம் கட்சியில் எம்பியாக இருந்த போது கூட ஐயப்ப தீட்சையில் செருப்பு அணிந்து இருந்தேன். அப்போது இல்லாமல்… இப்போது என் மீது விமர்சனம் செய்து பெயரை கெடுக்கிறீர்களே என்று கேட்டார். தெலுகு தேசம் தலைவர்கள் தன் மீது பரப்பும் விமர்சனங்களுக்கு பதிலளித்தார் அமைச்சர் அவந்தி ஸ்ரீநிவாஸ்.

ஐய்யப்ப தீட்சையில் செருப்பு அணிந்ததற்காக சமூக வலைத்தளங்களில் தன் மீது குற்றச்சாட்டுகள் எழுவதாக தெரிவித்தார். அதற்கான காரணங்களை வரிசைப்படுத்தினார். சில உடல் கோளாறுகளே காரணமாக இருப்பதாகக் கூறினார்.

உடல்நிலை காரணமாக செருப்பு அணிய வேண்டி இருப்பதாக தெரிவித்தார். தெலுகு தேசம் எம்பியாக இருந்த போதும் ஐயப்ப தீட்சையில் செருப்போடு தான் நடந்ததாக நினைவு படுத்தினார். தெலுகு தேசம் தலைவர் முரளிமோகன் கூட மாலை அணியும் போது செருப்பு அணிவார் என்றார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தீட்சையில் தான் செருப்பணியும் விஷயம் தெலுகு தேசம் கட்சியில் இருக்கும் போதே அனைவருக்கும் தெரியும் என்றும் ஆனால் சந்திரபாபு மதத்தை அரசியலுக்கு குறுக்காக வைத்து தன்னை டார்கெட் செய்கிறார் என்றும் ஆத்திரப்பட்டார்.

தெலுகு தேசம் கட்சியில் மாலை அணிந்த போது புனிதமாக இருந்த நான் ஒய்சிபியில் சேர்ந்த உடனே புனிதம் குறைந்து விட்டேனா என்று கேட்டார் . நான் இந்து மதத்தை விரும்புபவன். இந்துவாகப் பிறந்தேன். இந்துவாகவே இருப்பேன் என்றார் அமைச்சர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img