சினிமாத்தனமாக சில்லறைத் திருட்டு.. சிக்கிக் கொண்ட ‘விசுவாச’ முன்னாள் ஊழியர்!

Published:

theft cloth - 2026

இத்தனை வினோதமாக எங்காவது திருடுவார்களா? குறுக்கு வழியில் பொருளீட்ட முயன்ற திருட்டுக் கூட்டத்தை சித்தூர் மாவட்ட போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

சினிமாத்தனமாக ரூபாய் 47 லட்சம் மதிப்புள்ள பருத்தித் துணி பண்டல்களை திருடிய 4 பேரை கைது செய்தனர் . இந்த வழக்கில் கர்நாடகாவைச் சேர்ந்த நாகேந்திர ராவு, மல்லிகார்ஜுன், சசிகுமார், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். அவர்கள் திருடிய துணிகளோடு கூட டயோட்டா கார், கன்டைனர் ஆகியவற்றை கைப்பற்றினர்.

குண்டூர் மாவட்டம் சந்தோல் அருகிலுள்ள என்எஸ்எல் டெக்ஸ்டைல்ஸுக்கு சொந்தமான ரூ 47 லட்சம் மதிப்புள்ள 295 காட்டன் ரோல்களோடு கன்டைனர் பெங்களூருக்கு கிளம்பியது. கங்கவரம் மண்டலம் அருகில் உள்ள மேம்பாலம் அருகில் வண்டியில் கோளாறு காரணமாக கன்டைனர் நின்றுவிட்டது.

அந்த செய்தியை டிரைவர் முதலாளிக்கு தெரிவித்தார். அதற்கு முன் அந்த கம்பனியில் வேலை செய்த நாகேந்திரராவு இந்த விஷயத்தை அறிந்து கொண்டு தன் மூன்று தோழர்களோடு கன்டைனர் நின்ற இடத்தை சென்றடைந்தார்.

டிரைவருக்கு மது ஊற்றிக் கொடுத்து அவரை மயக்கத்தில் ஆழ்த்தி விட்டு வேறு ஒரு வாகனத்தில் காட்டன் ரோல்களை லோடு செய்து தப்பித்து விட்டனர். அவற்றை பெங்களூரில் பாதி விலைக்கு விற்றனர்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

கன்டைனர் முதலாளி நாராயணா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து நால்வரையும் கைது செய்தனர். அவர்கள் இதற்கு முன்பே பல குற்றங்களில் ஈடுபட்டிருந்ததை போலீசார் அடையாளம் கண்டனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img