நாடாளுமன்றத்துக்கு வந்தார் பிணையில் வெளியான ப.சிதம்பரம்!

Published:

chidambaram parleament - 2026

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமினில் வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று நாடாளுமன்றம் வந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரான ப.சிதம்பரம் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்திருந்தார். முன்னதாக, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்திருந்த நிலையில், அவருக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி அடங்கிய அமர்வு அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதை அடுத்து ப.சிதம்பரம் 106 நாள் சிறைவாசம் முடிந்து நேற்று இரவு பிணையில் வெளியில் வந்தார். அவர் ஊடகங்களுக்கு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு குறித்து பேட்டி எதுவும் அளிக்கக் கூடாது, சாட்சிகளை மிரட்டவோ கலைக்கவோ கூடாது, வெளிநாடு செல்லக் கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

Related articles

Recent articles

spot_img