செங்கோட்டையை அடுத்த பண்பொழியில் சிக்கிய மலைப்பாம்பு மற்றும் சருகு மான்குட்டி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
panpozi malaipampu - 2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள பண்பொழி கிராமத்தில் நேற்று மலைப்பாம்பு ஒன்று கிராமத்தினர் கண்களில் பட்டுள்ளது. இதை அடுத்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் பண்பொழி கிராமத்துக்கு வந்த வனத்துறையினர், அந்த மலைப்பாம்பை பிடித்து மீண்டும் வனத்தில் கொண்டு போய் விட்டனர்.

அதே போல், நேற்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அருகில் அமைந்துள்ள பண்பொழி கிராமத்துக்குள் அரிய வகை சருகு மான் குட்டி ஒன்று வனத்தில் இருந்து தப்பி வந்துள்ளது.

அந்த சருகு மான்குட்டியைப் பிடித்த கிராமத்தினர், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து அங்கே வந்த வனச்சரகர் அறிவுரையின் பேரில் மேக்கரை பீட் வனவர், மற்றும் வனக்காவலர்கள், அந்த கிராமத்தினர் பிடித்து வைத்திருந்த சருகு மான் குட்டியை கூண்டில் அடைத்து மேக்கரை காட்டுப்பகுதியிலேயே கொண்டு போய் விட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.