ஹையோ லேட்டாச்சு… ஓட்டமாய் ஓடிப் போன பியூஷ் கோயல்! அதிசயித்த எம்பி.,க்கள்!

Published:

piyush goyal in parliament1 - 2026

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்ததும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது ரயில்வேத் துறை மற்றும் வர்த்தகம், தொழில் துறை அமைச்சர்பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தைச் சென்றடைவதற்கு சற்று தாமதம் ஆனது. இதை அடுத்து அவர் ஓட்டமும் நடையுமாக ஓடி வந்தார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக எம்பிக்கள் வருகை குறைந்தது தொடர்பாக பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்தார். இதனை ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருந்தார்.

piyush goyal in parliament - 2026

மேலும், மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கும்போது மக்களவையில் உள்ளே இருக்க வேண்டும் என்பதால், நாடாளுமன்றத்திற்குள் அவர் ஓட்டமாக ஓடினார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அவரது கடமை உணர்வுக்கு தலைவணங்குவதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img