தாகத்துக்கு தண்ணிக் கேட்டு சிறுமியிடம் மோகத்தை தீர்த்துக் கொண்டவன் கைது!

இந்தியா கிரைம் நியூஸ் புகார் பெட்டி பொது தகவல்கள்
vankodumai - 2026

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம். கஞ்ஜிரப்பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுமி சம்பவத்தன்று ஸ்கூலுக்கு போய்விட்டு வீட்டிற்கு வந்தாள்.. இவளது அம்மா உள்ளிட்ட பலரும் வேலைநிமித்தமாக வெளியில் சென்றுவிட், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.

இந்த சமயத்தில், வீட்டிற்கு அருண் சுரேஷ் என்ற 25 வயது இளைஞர் வந்தான்.. அந்த சிறுமியின் அண்ணனின் நண்பன் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.

அப்போதுதான் வீட்டில் தனியாக சிறுமி இருப்பதை சுரேஷ் கவனித்துள்ளான். பிறகு தாகமாக இருப்பதாகவும், குடிக்க கொஞ்சம் தண்ணீர் தருமாறும் கேட்டுள்ளான். அண்ணனின் நண்பன் என்று சொன்னதால், சிறுமி சமையலறையில் சென்று தண்ணீர் எடுத்துள்ளார்.

suresh - 2026

அப்போது பின்னாடியே சென்ற சுரேஷ், சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யவும், சிறுமி கத்தி கூச்சலிட்டாள்.. இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் சுரேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான்.

நடந்த சம்பவத்தை சிறுமி பெற்றோருக்கு போன் செய்து கதறியபடியே சொல்லவும், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக காவல்துறையில் புகார் தந்தனர்.

இதன் அடிப்படையில், சுரேஷை காவலர் தேடி வந்தநிலையில், கோட்டயத்தில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் சுரேஷ் பதுங்கியிருந்ததை கண்டறிந்து, விரைந்து கைது செய்தனர். வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து சிறுமியை நாசம் செய்த சுரேஷ் மீது போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ளான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.