December 5, 2025, 6:58 PM
26.7 C
Chennai

ரோஹிங்கியாக்களை ஏன் இந்தியா ஏற்கவில்லை: அமித் ஷா கூறிய அந்த விளக்கம்!

amithsha citizenship amendment bill 1 - 2025

இன்று மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா தாக்கலின் போதான விவாதத்தில், ரோஹிங்கியாக்களை ஏற்றுக்கொள்வதற்கான கோரிக்கையுடன் கூடிய கூக்குரலும் கூச்சலும் மீண்டும் எழுந்தது.

ஆனால் இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளக்கம் அளித்த போது, இந்தியாவில் ரோஹிங்கியாக்களை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதை தெளிவுபடுத்தினார். ரோஹிங்கியாக்கள் பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்கு வந்தவர்கள் என்பதால் இந்த மசோதா குறித்து பேசப்படும்போது இது தேவையற்றது என்றார்.

இத்தகைய சூழ்நிலைகளில், ரோஹிங்கியாக்களை ஏற்றுக்கொள்வதற்கு சர்வதேச விதிமுறைகளுக்குக் கூட இந்தியா கட்டுப்படவில்லை. அவையில் அமித் ஷா வலியுறுத்தியது போல, ரோஹிங்கியாக்கள் பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வர்கள் என்பதும், நுழைந்த விதம், ‘முன்னேறும் இயக்கம்’ என்றும் கூறப் படுகிறது.

‘முன்னேறும் இயக்கம்’ என்பது ஒரு நாட்டிலிருந்து அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் அவர்கள் சர்வதேச பாதுகாப்பை அனுபவித்தபடி, அல்லது அத்தகைய சர்வதேச பாதுகாப்பை நாடியபடி மற்றும் பெற்றிருக்கக் கூடிய ஒரு இயக்கத்தைக் குறிக்கிறது. இது வெளிப்படையாக ஓர் ஒழுங்கற்ற இயக்கம்தான்! இது அகதிகளின் சாதாரண நடவடிக்கைக்கு முரணானது அல்ல!

யு.என்.எச்.சி.ஆர் குறிப்பிடுவது என்ன என்றால், “சர்வதேச அகதிகள் சட்டம் அகதிகளுக்கு தஞ்சம் புகுந்த நாட்டைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கவில்லை. அடுத்தடுத்த நாடுகளில் இருந்து ஒழுங்கற்ற இயக்கமாக பெயர்வதையும் அங்கீகரிக்கவில்லை.

மேலும், “அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் வேற்று நாடுகளின் எல்லைக்குள் நுழைவதற்கான உரிமை, அகதிகளின் பாதுகாப்பிற்கான சர்வதேச சட்டங்களின் அதிகாரத்தில் இருந்து பெறப்படுகிறது, ஆனால் அவர்களுக்கு அவ்வாறு செய்ய சட்டப்பூர்வ அனுமதி இல்லை.

அகதிகளை அடையாளம் காண்பது மற்றும் அங்கீகரிப்பதை நிர்வகிக்கும் தேசிய சட்டங்கள் மற்றும் செயல்முறைகளுக்கு இணங்க மேற்கொள்ள வேண்டியது, அந்த அந்த நாடுகளுக்கு சட்டபூர்வமானது.

சட்டரீதியான பாதுகாப்புகளுக்கு உட்பட்டு அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்கு எதிரான சில சூழ்நிலைகளில் உட்பட, ஒழுங்கற்ற முறையில் தங்கள் எல்லைக்குள் நுழையும் அல்லது தங்கியிருக்கும் நபர்களுக்கு எதிராக நாடுகள் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம்.

குறிப்பிடத்தக்க வகையில், அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் நுழையும் நாடுகளுக்கு கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன என்ற உண்மையை UNHCR வலியுறுத்துகிறது.

முன்னேறும் இயக்கத்தின் விளைவாக எழும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு சட்டங்களை மீறியதற்காக அத்தகைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடுகளுக்கு உரிமை உண்டு என்பதையும் அது ஒப்புக்கொள்கிறது.

1951 அகதிகள் தொடர்பான மாநாட்டின்போது, அதற்கு இந்தியா ஒரு உறுப்பு நாடு அல்ல என்பதையும் 1967 நெறிமுறையையும் இங்கே நாம் நினைவில் கொள்வது அவசியம். எனவே, எந்த சர்வதேச மாநாடும் இந்தியாவைப் பிணைக்கவில்லை.

சர்வதேச மாநாடுகளை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டாலும், ரோஹிங்கியாக்கள் பங்களாதேஷ் வடிவத்தில் ஒரு பாதுகாப்பான புகலிடத்தைத் தவிர்த்து, பொருள் நன்மைகளைப் பெறுவதற்காக இந்தியாவை அடைகிறார்கள்.

எனவே, மிகத் தெளிவாக, அவர்கள் இந்தியாவுக்குள் நுழையும் போது பொருளாதாரச் சார்பு ஊடுருவல்காரர்கள் தானே தவிர, துன்புறுத்தல்களுக்கு ஆளான சிறுபான்மையினர் எனும் பிரிவில் அடங்காது!

மேலும், மலேசியா, இந்தோனேசியாவுடன் தாய்லாந்தாலும் ரோஹிங்க்யாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்! இவை இரண்டும் இஸ்லாமிய நாடுகளே.

ரோஹிங்கியாக்கள் மியான்மரின் ராகைன் மாகாணத்தில் இந்துக்களை கொடூரமாக படுகொலை செய்துள்ளனர். எனவே, அக்கால மதப் பிரிவினையுடன் இந்தியாவின் கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மக்கள்தொகையைப் பெருக்குவதை இந்தியா ஏற்றுக்கொள்வதற்கு எந்த வித நியாயமான காரணமும் கண்ணில் தெரியவில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories