நாக்க அறுத்துடுவேன்.. பொம்பளன்னு கூட பாக்க மாட்டேன்! ‘டிவி டிபேட்டில் ரவுண்டு கட்டிய எம்.எல்.ஏ.,’!

Published:

tv debate mla - 2026

நாக்கை அறுத்து விடுவேன்… பொம்பள என்று கூட பார்க்க மாட்டேன்… என்று, தொலைக்காட்சியின் லைவ் டெலிகாஸ்டில் ஒய்சிபி எம்எல்ஏ நெருப்பைக் கக்கினார்.

“பைத்தியக்காரத்தனமாக பேசினால் மரியாதை இருக்காது.. தேர்தலில் தோற்றுப் போய் மக்களால் செருப்படி வாங்கிக்கூட வெட்கமில்லாமல் பேச வந்துட்டாங்க…” என்று தெலுகுதேசம் மகளிர் தலைவி மீது ஒய்சிபி எம்எல்ஏ தீவிரமாக எரிந்து விழுந்தார்.

“நாக்கு அறுந்து விடும்.. ஜாக்கிரதை!” என்று தெலுங்குதேசம் மகிளா தலைவரை தீவிரமாக எச்சரித்தார் ஆட்சியிலிருக்கும் ஒய் சிபி எம்எல்ஏ. முதல்வர் ஒய்எஸ் ஜகன் மீது விமர்சனம் செய்ததால் எம்எல்ஏ பொறுமையிழந்து இந்த எச்சரிக்கை அளித்தார். வாயை மூடு என்று எரிந்து விழுந்தார்.

ஒரு டிவி சேனல் இன்டர்வியூவில் பங்குகொண்ட தலைவர்கள் மத்தியில் தீவிரமாக வாக்குவாதம் எழுந்தது.

தலைநகர் அமராவதி மீது சர்ச்சை நடக்கும் சந்தர்ப்பத்தில் தெலுங்குதேசம் மகளிர் தலைவர் பஞ்சமர்தி அனுராதா தலைநகர் குறித்து பேசுகையில், அமைச்சர் ‘போத்சா’ செய்த விமரிசனத்தை கண்டித்தார். சந்திரபாபுவை பச்சோந்தி என்று குறிப்பிட்டதால் மகளிர் தலைவர் கோபமாக விமர்சித்தார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!
tv debate mla1 - 2026

கூகுளில் பச்சோந்தி என்று தேடினால் யார் பெயரும் வராது. ஆனால் கைதி நம்பர் 6093 என்று தேடினால் சிஎம் முதல்வர் ஜெகன் பெயர் வரும் என்று தீவிரமாக விமர்சனம் செய்தார். அதேபோல் ஆந்திரா 420 யார் என்று கேட்டால் கூட ஜெகன்மோகன் ரெட்டி பெயர் வரும் என்று மிகவும் சூடாக விமர்சித்தார்.

சர்ச்சையில் பங்குபெற்ற விஜயவாடா சென்ட்ரல் எம்எல்ஏ மல்லாதி விஷ்ணு, தெலுகு தேசம் தலைவர் அனுராதாவின் விமர்சனத்தை குறித்து தீவிரமாக மறுப்பு தெரிவித்தார்.

பைத்தியம் மாதிரி பேசினால் மரியாதையாக இருக்காது என்று எச்சரித்தார். மாநில முதல்வரை குறித்து கௌரவமாக பேசவேண்டும் என்று குறிப்பிட்டார். தேர்தலில் தோற்று மக்களிடம் செருப்படி வாங்கியும் கூட வெட்கம் இல்லாமல் பேச வந்து விட்டீர்களா என்று தீவிரமாக விமர்சனம் செய்தார்.

அதற்குள் அனுராதா உங்க பாரில் 7 பேர் இறந்து விட்டார்களாம் என்று கூறவே எம்எல்ஏ மீண்டும் கோபமுற்று, “வாயை மூடு.. பைத்தியம் மாதிரி பேசாதே. பைத்தியம் மாதிரி பேசினால் உள்ள தள்ளி விடுவேன் ஜாக்கிரதை…” என்று எச்சரித்தார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

“உன் நிலை என்ன? நீ என்ன? “என்று வெகுவாக ஆத்திரம் காட்டினார். பொம்பளைனு கூட பாக்க மாட்டேன் நாக்கை அறுத்து விடுவேன் என்று தீவிரமாக எச்சரித்தார்.

கார்ப்பரேடராக இருக்கக் கூட லாயக்கில்லாத அனுராதா முதல்வரைப் பற்றி விமர்சனம் செய்வதா? நாக்கு அறுந்து போகும்..” என்று எச்சரித்தார்.

அவர்களை விவாத நெறியாளர் சமாதானப்படுத்தியதும் விவாதம் முடிந்துபோனது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img