66 பேர் பயணித்த வங்கதேச படகு… அந்தமானில் நிறுத்திய அதிகாரிகள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
IMG 20200114 WA0018 - 2026

அறுபத்தாறு பேர் பயணித்த பங்களாதேஷ் படகை அந்தமானில் நிறுத்தி வைத்த இந்திய அதிகாரிகள்.

பங்களாதேஷிலிருந்து வந்த படகினை ‘சென்டினலீஸ்’ இனத்தவர் வசிக்கும் தீவிற்கு அருகில் இந்திய அதிகாரிகள் நிறுத்திவைத்தார்கள்.

அந்தப் படகில் 66 பேர் சந்தேகத்திற்கு இடமான ரோஹிங்காக்கள் இருப்பதாக அந்தமான் நிக்கோபார் போலீசார் தெரிவித்தனர். இந்தப் படகை துர்மக்ளி தீவின் அருகில் நிறுத்தியதாக கூறினார்கள்.

இந்தப் பகுதி வடக்கு சென்டினல் தீவில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சந்தேகத்திற்கிடமான ரோஹிங்காக்களோடு வந்த அந்த படகு சுமார் 15 நாட்களுக்கு முன் பங்களாதேஷில் இருந்து கிளம்பிய தாகத் தெரிகிறது.

இந்த மாதம் 13ம் தேதி இந்த படகு பற்றி போர்ட்ப்ளேர் போலீஸ் அதிகாரிகளுக்கு செய்தி வந்தது.

துர்மக்ளி தீவின் சமீபத்தில் சந்தேகத்திற்கிடமான படகு வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இந்த சந்தேகத்திற்கிடமான படகை அடையாளம் காண்பதற்காக உடனுக்குடன் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். இறுதியில் மாலை இந்தப் படகை கண்டறிந்து அதில் பயணித்த 66 பேரையும் சிறைபிடித்தனர்.

இவர்களுள் 24 பேர் ஆண்கள் 27 பேர் பெண்கள் 15 குழந்தைகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.