6 அதிவேக ரயில்வே காரிடர்கள்! சென்னை-பெங்களூர் உள்பட..!

Published:

railway station 1 - 2026

நாட்டில் ஆறு அதிவேக ரயில்வே காரிடார்கள் அமைகின்றன. அதில், சென்னை பெங்களூர், ஹைதராபாத்தும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியன் ரயில்வேஸ் நாட்டில் 6 ஹைஸ்பீடு ரயில்வே காரிடார்களை ஏற்பாடு செய்யவுள்ளது. டெல்லி – அகமதாபாத் புல்லெட் ரயில் மார்க்கம் போல் மேலும் ஐந்து காரிடார்களை தேர்ந்தெடுத்து உள்ளார்கள். அந்த வரிசையில் மும்பை ஹைதராபாத் மார்க்கமும் உள்ளது.

ஹை ஸ்பீடு, செமி ஹை ஸ்பீட் ரயில்வே காரிடர்களுக்காக நாட்டில் ஆறு ரூட்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள். மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் பிராஜக்டை முதல் ஹை ஸ்பீட் பிரெஜெக்டாக தேர்ந்தெடுத்திருந்தனர்.

தற்போது புதிதாக மீண்டும் 5 மார்க்கங்களை தேர்ந்தெடுத்து உள்ளதாக ரயில்வே போர்டு சேர்மன் விகே யாதவ் ஜனவரி 29 புதன்கிழமை தெரிவித்தார். அந்த வரிசையில் மும்பை புனே ஹைதராபாத் மார்க்கம் கூட உள்ளது.

vkyadav - 2026

711 கிலோமீட்டர் நீளமான இந்த மார்க்கத்தை ஸ்பீட் காரிடராக விரிவாக்கம் செய்ய உள்ளார்கள். ஹை ஸ்பீட் காரிடரில் ரயிலின் வேகம் மணிக்கு 300 கிலோமீட்டர். செமி ஹை ஸ்பீட் ரயிலின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர். ஹை ஸ்பீடு, செமி ஹை ஸ்பீடு காரிடர்களுக்காக மொத்தம் 6 செக்ஷன்களை தேர்ந்தெடுத்து உள்ளதாக ரயில்வே போர்டு சேர்மன் விகே யாதவ் தெரிவித்தார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

மத்திய அரசின் பட்ஜெட் 2020 பின்னணியில் அவருடைய அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றுக்கு தொடர்பான முழுமையான திட்டத்தின் அறிவிப்பு டிபிஆர் ஓர் ஆண்டுக்குள் தயாராகும் என்று யாதவ் கூறினார். நிலங்கள் கிடைப்பது, அலைன்மென்ட் போன்ற அம்சங்களின் ஆதாரமாக சாத்தியமா இல்லையா என்பதை பொறுத்து டிபிஆர் தயாரிப்பு செய்ய உள்ளதாக விகே யாதவ் தெரிவித்தார்.

எல்லா விஷயங்களையும் முழுமையாக பரிசீலித்த பின் ஹை ஸ்டுடைட் ஏற்பாடு செய்வதா செமி ஹை ஸ்பீட் ஏற்பாடு செய்வதாக என்ற விஷயத்தின் மீது முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார். புதிதாக தேர்ந்தெடுத்த காரிடர்களுக்கு தொடர்புடைய டிபிஆர் ஓராண்டுக்குள் தயார் செய்வோம் என்று கூறினார்.

ஸ்பீட் காரிடர் ரூட்கள்:-

  1. டில்லி நொய்டா ஆக்ரா லக்னோ வாரணாசி 865 கிலோமீட்டர்
  2. டெல்லி ஜெய்ப்பூர் உதய்பூர் ஆமதாபாத் 886 கிலோமீட்டர்.
  3. மும்பை நாசிக் நாக்பூர் 753 கிலோமீட்டர்.
  4. மும்பை பூனா ஹைதராபாத் 711 கிலோமீட்டர்.
  5. சென்னை பெங்களூரு மைசூரு 435 கிலோமீட்டர்.
  6. டெல்லி சண்டிகர் லூதியானா ஜலந்தர் அமிர்தசர் 459 கிலோ மீட்டர் .
ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

முதல் ஹை ஸ்பீட் காரிடடரான மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்ட நிர்மாணத்தை மத்திய அரசு பிரஸ்டீஜியஸ் ஆக எடுத்துக்கொண்டுள்ளது. 2023 டிசம்பருக்குள் இந்த திட்டத்தை முடிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளார்கள். இந்த திட்டத்துக்கு தொடர்பாக ஆறு மாதங்களில் 90 சதவிகிதம் நிலங்களை கையகப் படுத்துவது நிறைவு பெறும் என்று விகே யாதவ் தெரிவித்தார். இந்த திட்டத்துக்கு மொத்தம் 1380 ஹெக்டேர்கள் நிலம் தேவையாக இருக்கும் என்றார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img