சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல்! பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை!

Published:

srinagar militant two killed - 2026

ஸ்ரீநகரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே சிஆர்பிஎப் வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகர்-பாரமுல்லா சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் காலை 5 மணிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் 3 பேர் திடீரென சிஆர்பிஎப் வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய பதிலடியில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு பயங்கரவாதி காயத்துடன் பிடிபட்டான்.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பிகாரை சேர்ந்த ரமேஷ் ரஞ்சன் என்ற வீரர் தலையில் குண்டுபாய்ந்து வீரமரணம் அடைந்தார்.

Related articles

Recent articles

spot_img