புது தில்லி: நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், மறுநாளே கேதார்நாத்துக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். சோம்நாத்தில் கட்சித் தலைவர் அமித் ஷா பிரார்த்தனை செய்தார்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏழு கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி சனிக்கிழமை இன்று உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு வழிபடுவதற்காக சென்றார். அதே போல், கட்சித் தலைவர் அமித் ஷாவும் இடைவிடாத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு, இன்று காலை சோம்நாத் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
श्री महारुद्राय सोमेश्वराय ज्योतिर्लिंगाय नम: ।।
सोमनाथ ज्योतिर्लिंग धर्म, आस्था, विश्वास और वैभवशाली सनातन परंपरा का अद्वितीय प्रतीक है।
आज सोमनाथ भगवान के दर्शन कर पूजा अर्चना करने का सौभाग्य प्राप्त हुआ।
हर हर महादेव! pic.twitter.com/x06KnW6gcz
— Chowkidar Amit Shah (@AmitShah) May 18, 2019
ஞாயிற்றுக்கிழமை நாளை நாடாளுமன்றத் தேர்தலின் கடைசிக் கட்டமாக, 59 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், அதற்குச் சற்று முன்னதாக பாஜக. ,தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், மறு நாளே பிரதமர் மோடி அவருக்கு மிகவும் விருப்பமான இமயமலையின் ஜோதிர்லிங்கத் தலமான கேதார்நாத் சென்றார். கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் மேகவெடிப்பு எனும் மாபெரும் பேய்மழையில் கேதார்நாத் பகுதியே தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது. கேதார்நாத் ஊர் உருக்குலைந்தது. கோயிலுக்கு பெரிய அளவில் சேதம் இல்லை என்றாலும், கோயிலை பின்னர் சீரமைத்து, கேதார்நாத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார் பிரதமர் மோடி.
What a splendid way to celebrate #BuddhaPurnima at the holy mountains of Uttarakhand!#KedarNath pic.twitter.com/uDK6MNgjhh
— Chowkidar Geetika Swami (@SwamiGeetika) May 18, 2019
கேதர்நாத் செல்வது பிரதமருக்கு இது புதிதல்ல. இதுவரை 3 முறை சென்றுள்ளார். பிரதமர் ஆன பின்னர் 2017 மே மாதம் முதன் முதலாகச் சென்றார். தொடர்ந்து, 2017 அக்டோபர், 2018 நவம்பர் என கேதார்நாத் கோயிலுக்குச் சென்று வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டார். இந்நிலையில், 16வது நாடாளுமன்றத்தின் பிரதமராக பதவியை நிறைவு செய்யும் தறுவாயில் கேதார்நாத் சென்று, சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றிருக்கிறார். தற்போது மோடி சென்றுள்ளது 4 வது முறை.
தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமை நாளை பத்ரிநாத் கோயிலுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கே நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்று, தியானத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து கோயில் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் விவாதிக்கிறார்.
#Uttarakhand: Prime Minister Narendra Modi holds meeting with Chief Secretary of the state, Utpal Kumar over re-development projects in #Kedarnath. pic.twitter.com/8H3vtnK52J
— ANI (@ANI) May 18, 2019
இந்நிலையில் நாளை ஞாயிறு கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப் பட்டு, முடிவுகள் வெளியாகின்றன.



