ஆகம மீறல்… அபசாரம்..! திருப்பதி திருமலை ஆலயத்தின் மேல் சுற்றிய விமானத்தால் சர்ச்சை!

இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
tirupathi flight - 2026
கோப்பு படம்:

திருமலை ஆலயத்தின்மீது சுற்றி வருகின்ற விமானத்தைக் கண்டு, அபசாரம்…! அபசாரம்…! என்று கூக்குரலிடுகிறார்கள் பக்தர்கள்.

திருமலை மீது பறந்த விமானம் பரபரப்பு ஏற்படுத்தியது. மத்திய அரசுக்குச் சொந்தமான சர்வே ஆஃப் இந்தியா விமானம் இரண்டு நாட்களாக திருமலை மீது சுற்றி வருகிறது. இதற்கு முன்பே திருமலை மீது நோ ஃபிளையிங் ஜோனாக (விமானங்கள் பறக்க தடை செய்யப் பட்ட பகுதியாக) அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றி வரும் விமானம் மத்திய அரசுக்கு சொந்தமானது என்று தெரியாமல் திருமலை அதிகாரிகள் கலவரத்துக்கு உட்பட்டார்கள். என்ன நடக்கிறது என்று தெரியாமல் சென்னை ஏர் டிராபிக் கண்ட்ரோலருக்கு செய்தி தெரிவித்தார்கள்.

tirupathi therottam - 2026

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விமானங்களின் மூலம் நாட்டு பூகோள சூழ்நிலைகளை சர்வே ஆஃப் இண்டியா சர்வே செய்வது வழக்கம். ஆனால் வைகானச ஆகம சாஸ்திரத்தின்படி ஸ்ரீவாரி விமான வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு மேலாக விமானங்கள் பறக்கக் கூடாது என்ற நியமம் உள்ளது.

இதுகுறித்து இதற்கு முன்பே ஏவியேஷன் ஆஃப் இந்தியாவுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் புகார் அளித்துள்ளது. திருமலை மீது விமானங்கள் சுற்றக் கூடாது என்று ஏற்கனவே ஆந்திர அரசாங்கம் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. திருமலை மீது இந்த இடங்களில் தேவதைகள் சஞ்சாரம் செய்து வருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.