தனது இல்லத் திருமணத்துக்கு பிரதமர் மோடியை அழைத்த ரிக்ஷா தொழிலாளியை நேரில் சந்தித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் பிரதமர் மோடி.!
வாராணசி சுற்றுப் பயணத்தில் ஒரு பாகமாக இந்த மாதம் 16ஆம் தேதி ஒரு ரிக்ஷா ஓட்டுபவரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அந்த ரிக்ஷா ஓட்டுபவர் வேறு யாருமல்ல. அண்மையில் தன் மகளின் திருமணத்திற்கு வர வேண்டும் என்று மோடிக்கு திருமண பத்திரிக்கை அனுப்பிய மங்கள் கேவத் தான்.
மோடிக்கு அந்த திருமண பத்திரிக்கை கிடைத்தவுடன் மணமக்களுக்கு ஆசீர்வாதத்தை தெரிவித்து பிரதமர் ஒரு கடிதம் எழுதினார். இதன்படி வாராணசி சுற்றுப்பயணத்தில் மோதியை சந்திக்க கேவத் விருப்பம் தெரிவித்தார். கேவத்தை சந்தித்த மோடி அவருடைய நலன் பற்றி விசாரித்தார்.
இது குறித்து மங்கள் பேசுகையில் தன் மகளின் திருமணம் தொடர்பாக முதல் திருமண அழைப்பை பிரதமர் மோடிக்கு அனுப்பினேன். டெல்லியிலுள்ள பிஎம் அலுவலகத்துக்கு பிப்ரவரி எட்டாம் தேதி நானே நேராகச் சென்று பத்திரிக்கையை அளித்தேன். அதன்பின் மோடியிடமிருந்து ஆசீர்வாதம் தெரிவித்து கடிதம் வந்தது .கடிதத்தைப் பார்த்த உடனே நான் மிகவும் ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் ஆழ்ந்தேன் என்று தெரிவித்தார்.
கேவத் கங்காநதியின் பக்தர். தனக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை கங்கா சுற்றுச்சூழல் சுத்தம் செய்வதற்காக செலவழிக்கிறார். இவர் வசிக்கும் டோம்ரி கிராமத்தை நரேந்திரமோடி தத்து எடுத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.