இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிரசாரத்தால்… மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியார்கள் மீது கண்மூடித்தன தாக்குதல்!
தற்போது சிஏஏ என்.ஆர்.சி., ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை இஸ்லாமிய ஜமாத்கள் வழியே இஸ்லாமிய மக்களிடம் சில சக்திகள் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு வரும் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாதுஎன்பதுடன், அவர்களை தங்கள் பகுதியில் இருந்து ஓட ஓட விரட்ட வேண்டும் என்று ஜமாத்களில் கட்டளை இடப் பட்டிருப்பதாக அண்மையில் ஒரு காணொளி வைரலானது.
குறிப்பாக திருநெல்வேலி பகுதியில் இது போன்ற விரட்டியடிக்கும் காட்சிகளும் சமூகத் தளங்களில் வைரலாயின. அவற்றின் படியே, இன்றும் அது போன்ற ஒரு விரட்டியடிப்புச் சம்பவம் நடைபெறுள்ளது.
நெல்லை டவுண் கம்பகடை தெரு (மகிழ்வண்ணபுரம்) பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு சென்ற அரசு சார்பு ஊழியர்கள் மீது முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிக்காக எடுத்து வந்திருந்த பதிவேடுகளை அவர்களிடம் இருந்து பறித்து, முஸ்லீம் அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தாங்கள் இதுவரை எடுத்து வந்த கணக்குகள் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சத்தில் உள்ளனர் ஊழியர்கள்!
இது தொடர்பாக, மாநகர காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு வருபவர்களை மிரட்டும் பழைய வைரல் வீடியோ…