
தெலங்கானா மாநிலம் குண்டூர் அருகே காதலியின் தாயாரை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் ரயில் முன் பாய்ந்தார்.
கொலனகோண்டாப் பகுதியிலுள்ள ரயில் பாதையில் தலைத் தனியாகவும் உடல் தனியாகவும் கிடந்ததை காலையில் அவ்வழியாக சென்ற மக்கள் கண்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் தலையையும், உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விசாரணையில் இறந்து கிடந்தது ராணுவ வீரரான எமினெனி பாலாஜி என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டின் விடுமுறையன்று எமினெனி பாலாஜி தனது சொந்த ஊரான கார்ப்பெலம் மண்டலுக்கு வந்திருந்த பொழுது ஒரு பெண்ணின் மேல் காதல் வயப்பட்டுள்ளார். அந்த பெண்ணோடு பல இடங்களுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சில மாதம் கழித்து, பாலாஜி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தெனாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் இவருடைய ராணுவ பணி பறிப்போனது.
ஆத்திரமடைந்த பாலாஜி நாட்டு துப்பாக்கியுடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அப்பெண்ணையும், அவரது தாயாரை சுட்டார். எனினும் அதிர்ஷ்டவசமாக இருவரும் காயத்துடன் உயிர் தப்பினர்.
அதற்குப்பின் அங்கிருந்து தப்பிய பாலாஜி பல இடங்களுக்கு சென்றார். இது தொடர்பான புகாரில் பாலாஜியை போலீசார் தேடி வந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய அவர் கொலனகோண்டாப் பகுதியிலுள்ள ரயில் பாதையில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டார்.
விசாரணை நடத்திய போலீசார் இவ்வாறு கூறுகின்றனர். எனினும் அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா, யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.



